தலைமை அலுவலகம் - இல.75 சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு -1
நிறுவனத்தின் பிரதானி - திரு.காமினி செனரத்
1956 இல் ப.நோ.கூ. சங்கங்கள் உருவாக்கப்பட்ட போது கூட்டுறவுச் சங்கங்களின் நிதித்தேவைகளும், கடன்தேவைகளும் பல மடங்காக அதிகரித்தன. இதனை ஈடு செய்யும் முகமாக  1956ம்ஆண்டு பதவி ஏற்ற அரசாங்கத்தில் கூட்டுறவுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் பிலிப்குணவர்த்தன இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலும் கிளைகளை கொண்ட கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை கூட்டுறவுச் சங்கங்களுக்குப் போதிய நிதி வசதிகளைச் செய்து கொடுக்க முயற்ச்சிகளை மேற்கொண்டார் ஆனால் நாட்டில் ஏற்ப்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் இவரின் முயற்சிகள் கைகூடவில்லை.
1960 இல் பதவிக்குவந்த புதிய அரசாங்கம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு பலமான வங்கியொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன்போது இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிகளுள் இலங்கை வங்கியைத் தவிர ஏனைய வங்கிகள் யாவும் வெளிநாட்டு வங்கிகளாக இருந்தமையால் இவ் வங்கிகள் யாவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொள்ளவில்லை.
எனவே 1961ம் இல் 16ம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் 1961ம் ஆண்டு மக்கள் வங்கி உருவாக்கப்பட்டது.

No comments:
Post a Comment